உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வைரலாகும் தனுஷின் கேப்டன் மில்லர் புல்லட் பைக் புகைப்படம்!

வைரலாகும் தனுஷின் கேப்டன் மில்லர் புல்லட் பைக் புகைப்படம்!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷான், நிவேதா சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்திற்காக தனுஷ் மிகப்பழமை வாய்ந்த புல்லட் பைக் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !