உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

தனுஷ் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் 'வாத்தி'. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார் . ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது . இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை ஆஹா ஓடிடி தளம் பெரும் விலைக்கு கைப்பற்றியுள்ளது .இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில் விரைவில் வாத்தி படத்தின் முதல் பாடலும் வெளியாகஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !