ஜி.வி.பிரகாஷின் செல்பி டிவியில் ஒளிபரப்பு
ADDED : 1142 days ago
ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியான படம் செல்பி. இதில் அவருடன் வர்ஷா பொல்லம்மா, கவுதம் மேனன், வித்யா பிரதீப், வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், சுப்பிரமணியம் சிவா, ஸ்ரீஜாரவி உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்த்து விடும் புரோக்கர்களின் பின்னணியில் உருவான படம். அந்த டான் புரோக்கராக கவுதம் மேனன் நடித்திருந்தார், அதை எதிர்த்து போராடும் மாணவராக ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம், தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. நாளை (9ம் தேதி) மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.