உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிக்பாஸ் 6 : சகோதரருக்கு ஆதரவு கேட்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

பிக்பாஸ் 6 : சகோதரருக்கு ஆதரவு கேட்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி நேற்று முதல் துவங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள். இந்த 20 பேரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டனும் ஒருவர். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், என்னுடைய சகோதரர் மணிகண்டன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை எப்போதும் நான் புஜ்ஜி என்று தான் அழைப்பேன். என் தந்தையின் மறு உருவமான என் சகோதரரை நீண்ட நாட்கள் நான் மிஸ் செய்யப் போகிறேன். அவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றியடைய வாழ்த்துகிறேன். பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க எனது சகோதரர் மணிகண்டனுக்கு வாய்ப்பளித்த விஜய் டிவிக்கு நன்றி என்று கூறியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், என் சகோதரர் மணிகண்டனுக்கு ஆதரவு தெரிவியுங்கள் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !