மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1062 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1062 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1062 days ago
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தற்போது தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல். தெலுங்கில் 'ஷாகுந்தலம், யசோதா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவுகளைப் பதிவிட்டு வரும் பழக்கம் கொண்டவர் சமந்தா. இடையில் சில மாதங்களாக எந்த ஒரு பதிவையும் பதிவிடவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் வந்தாலும் அவர் நடித்து வரும் படங்களைப் பற்றிய பதிவுகளை மட்டுமே போட்டிருந்தார். பொதுவான பதிவுகள் எதையும் போடவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து தத்துவப் பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார். மூன்று தினங்களுக்கு முன்பு 'விழுந்தாலும் நாட் அவுட்' என்று பதிவிட்டு அவரது வளர்ப்பு நாய் சோபாவில் விழுந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். இன்று 'நீங்கள் எப்போதும் தனியாக நடக்க முடியாது,' என்ற வாசகம் அணிந்த டீ ஷர்ட் அணிந்த தனது முகம் தெரியாத புகைப்படத்தைப் பகிர்ந்து 'ஒரு வேளை இதை கேட்க வேண்டி இருந்தால்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெறுவதற்காக சமந்தா அமெரிக்கா சென்று வந்ததாக ஒரு தகவல் டோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாகத்தான் இப்படி தத்துவப் பதிவுகளை பதிவிடுகிறார் போலிருக்கிறது.
1062 days ago
1062 days ago
1062 days ago