மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
1059 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
1059 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
1059 days ago
விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர். ஹிந்தியில் அவர் கதாநாயகியாக அறிமுகமான 'குட் பை' படம் கடந்த வாரம் வெளியானது. தொடர் படப்பிடிப்புகளின் காரணமாக சற்று ஓய்வெடுக்க கடந்த வாரம் மாலத் தீவு சென்றார். அவருடன் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ஒன்றாகச் சென்றதாக செய்திகள் வெளியாகின.
மாலத்தீவில் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாவில் பகிர்ந்தார் ராஷ்மிகா. ஆனால், அவர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக இருக்கும் எந்த புகைப்படத்தையும் வெளியிடவில்லை. மாறாக, விஜய் தேவரகொண்டாவின் கூலிங் கண்ணாடியை அவர் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் கிசுகிசுத்தார்கள். இருவரும் தங்களது காதலை மறுத்தாலும் ஒன்றாகவே மாலத் தீவு சென்றார்கள் என பாலிவுட் வட்டாரங்களிலும் பேச்சு எழுந்தது.
இந்நிலையில் மாலத் தீவிலிருந்து மும்பை திரும்பியிருக்கிறார் ராஷ்மிகா. அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு அதே கூலிங் கண்ணாடியை அணிந்து ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, “மிகவும் தேவைப்பட்ட விலகி வந்தது முடிவுக்கு வந்தது. இந்த இடத்திற்கு 'குட் பை' சொல்ல வேண்டும் என்று நம்ப முடியவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகைகள் அடிக்கடி மாலத் தீவிற்கு சென்று இப்படி புகைப்படங்களைப் பதிவிடுவதால் அந்த நாட்டின் சுற்றுலாதான் வளர்கிறது. அனைத்து இந்திய சினிமா நடிகைகளும் 'ஸ்பான்சர்' சுற்றுலாவாக இதைச் செய்து வருகிறார்கள். அதற்குப் பதிலாக இந்திய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பதிவிடலாம் என்றும் சிலர் குரல் எழுப்புகிறார்கள்.
1059 days ago
1059 days ago
1059 days ago