உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாளத்திலும் கால்பதிக்கும் அனிருத்

மலையாளத்திலும் கால்பதிக்கும் அனிருத்

அனிருத் சினிமா இசை அமைப்பாளராகி 10 ஆண்டுகள் ஆகிறது. 3, வேலையில்லா பட்டதாரி, வேதாளம், விக்ரம், மாஸ்டர், கத்தி, பேட்ட, தானா சேர்ந்த கூட்டம், டாக்டர், பீஸ்ட், திருச்சிற்றம்பலம் போன்றவை அவர் இசை அமைத்த முக்கியமான படங்கள். இப்போது ஜெயிலர், இந்தியன் 2, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அட்லீ இயக்கதில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றிருக்கும் அனிருத், நிவின் பாலி நடிப்பில் ஹனீப் அடேனி இயக்கும் படத்தின் மூலம் மலையாளத்திற்கும் செல்கிறார். ஏற்கெனவே தெலுங்கு படங்களுக்கும் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இதன் மூலம் அனிருத் பான் இந்தியா இசை அமைப்பாளராகி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !