உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யின் படத்தை தயாரிக்கும் தோனி?

விஜய்யின் படத்தை தயாரிக்கும் தோனி?

நடிகர் விஜய்யை வைத்து படம் தயாரிக்க பல முன்னணி தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள் . தற்போது தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் அவர் நடிக்கிறார்.

இந்த படம் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. லோகேஷ் கதை பணிகளை முடித்தபிறகு தான் இந்த படம் தொடங்கும் தேதி பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் அதன் 100வது படமாக விஜய்யின் படத்தினை தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது விஜய் 68 படத்திற்காக தான் என தெரிகிறது.

இதனிடையே புதிதாக தயாரிப்பு கம்பெனி தொடங்கியிருக்கும் தோனிக்கும் ஒரு படம் நடித்து கொடுக்க முடிவு செய்துள்ளாராம் விஜய். எண் 7 தனக்கு ராசியான எண் என்பதால் விஜய்யின் 70 வது படத்தை தயாரிக்க தோனி ஆர்வம் காட்டியுள்ளார் என தகவல்கள் றெக்க கட்டி பறக்கின்றன. ஆனால் இது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் அறிவித்தால் மட்டுமே இதுபற்றிய விபரம் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !