நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு ஆதரவு தெரிவித்த வனிதா
ADDED : 1090 days ago
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ள செய்தியை அவர்கள் வெளியிட்டதில் இருந்து சோசியல் மீடியாவில் சிலர் அதை சர்ச்சை ஆக்கி வருகிறார்கள். குறிப்பாக வாடகைத்தாய் விவகாரத்தில் அவர்கள் விதியை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நேரத்தில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். அதில், ‛‛ஒரு கணவன் - மனைவிக்கு பெற்றோர் ஆவதை விட சந்தோஷமான விஷயம் வேறு எதுவும் கிடையாது. இரண்டு அழகான குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி உள்ள நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும், லீகல் தெரியும், மெடிக்கல் தெரியும் என்று சில முட்டாள்கள் உங்களது பொன்னான நேரத்தை வீணாக்குவார்கள். நீங்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்'' என்றும் தெரிவித்திருக்கிறார் வனிதா.