உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாரா எடுத்த முடிவு?

நயன்தாரா எடுத்த முடிவு?

கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 9ஆம் தேதி இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதுகுறித்த தகவலை அவர்கள் வெளியிட்டதை அடுத்து வாழ்த்துகளும் விமர்சனங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்ற விஷயம் சர்ச்சையாகவும் ஓடிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நடிகர் கார்த்தி, ஒரு வாழ்த்து கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், பெற்றோர்களின் அணிக்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் நான்கு பேரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று எழுதி இருக்கிறார் கார்த்தி. இதற்கு விக்னேஷ் சிவன் கார்த்திக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே தங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருப்பதை அடுத்து அவர்களை பராமரிக்க வேண்டும் என்பதற்காக மூன்று மாதங்களுக்கு எந்த படங்களிலும் நடிக்கப் போவதில்லை என்று நயன்தாரா முடிவெடுத்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !