இயற்கை விவசாயி சுபாஷ் பாலேகர் பயோபிக்கில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்
ADDED : 1135 days ago
தமிழகத்தில் நம்மாழ்வார் போன்று கர்நாடகாவில் புகழ்பெற்ற இயற்கை விவசாயி சுபாஷ் பாலேகர். அவரது இயற்கை விவசாய நுட்பம் ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பல ஆண்டுகளாக அரசாங்க ஆதரவைப் பெற்றுள்ளது. மஹாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் கேரளாவும் இதனை பின்பற்றி வருகிறது.
தற்போது சுபாஷ் பாலேகரின் வாழ்க்கை கன்னடத்தில் சினிமாவாக தயாராகிறது. இதில் சுபாஷ் பாலேகராக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். சுற்றுசூழல் ஆர்வலரான விஜய் ராம் இயக்குகிறார். பிரகாஷ்ராஜ் சுபாஷ் பாலேகரை குருவாக ஏற்று சென்னை மற்றும் பெங்களூரில் இயற்கை விவசாயம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.