சாய் பல்லவிக்கு கிடைத்த இரண்டு பிலிம் பேர் விருதுகள்!
2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடித்து பிரபலமானவர் சாய்பல்லவி. அதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களிலும் பரவலாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டில் தெலுங்கில் லவ் ஸ்டோரி, ஷியாம் சிங்கராய் என்ற இரண்டு படங்களில் நடித்தார் சாய் பல்லவி. அப்படி ஒரே ஆண்டில் அவர் நடித்த இரண்டு படங்களுக்கும் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்திருக்கிறது.
அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள சாய்பல்லவி, ‛இதுபோன்ற மகிழ்ச்சியான தருணங்கள் அடிக்கடி நடக்காது. ஒரே வருடத்தில் இரண்டு படங்களுக்காக விருது பெற்று இருக்கிறேன். இந்த கதாபாத்திரங்களுக்காக பெற்ற அபரிமிதமான அன்பிற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இது போன்ற சிறந்த கதாபாத்திரங்கள் கிடைப்பதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்க வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார்.