உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாடகைத்தாய் விவகாரம்: குழு அமைத்து விசாரணை

வாடகைத்தாய் விவகாரம்: குழு அமைத்து விசாரணை

வாடகைத்தாய் மூலம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பெற்ற விவகாரத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‛வாடகைத்தாய் விவகாரத்தில் தேவைப்பட்டால் நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகார் குறித்து விசாரணை அறிக்கை வந்ததும், எந்த மாதிரியான விதிமுறை மீறல் மற்றும் முரண்பாடுகள் உள்ளன என்பதை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !