எனக்கு பயம் இல்லை - ரகுல் ப்ரீத் சிங்
ADDED : 1088 days ago
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பஹ்னானியை இவர் காதலிக்கிறார். காதல் பற்றி ரகுல் கூறுகையில், ‛‛சிலர் தங்கள் காதலை சொல்லாமல் இருப்பது அவர்களின் மனநிலை. நான் எனது காதலை வெளிப்படுத்தினேன். சினிமாவிலும், நிஜ வாழ்விலும் நடிக்க மாட்டேன். உண்மையாக இருக்க விரும்புகிறேன். வாழ்வில் துணை முக்கியம். நானும், ஜாக்கியும் ஒருமித்த கருத்தோடு உள்ளோம். பயம் காரணமாக சில விஷயங்களை சிலர் மறைத்து சிக்கலுக்கு ஆளாகின்றனர். எனக்கு பயமில்லாததால் காதலை மறைக்கவில்லை'' என்றார்.