திருமணத்திற்கு தயாராகிறாரா ஹன்சிகா?
ADDED : 1086 days ago
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என்று முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஹன்சிகா. இவர் நடித்த 50வது படமான மஹா படம் சமீபத்தில் வெளியானது. தற்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். அதோடு முன்பை விட எனது உடல் கட்டையும் ஸ்லிம்மாக மாற்றி இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வட இந்திய தொழிலதிபர் ஒருவரை அவர் மணக்கப்போவதாகவும், ஹன்சிகாவின் திருமணம் டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இதுபற்றி ஹன்சிகா தரப்பில் விசாரித்தபோது, ‛‛தற்போது அவர் படப்பிடிப்பு ஒன்றில் இருப்பதாகவும், எனக்கே தெரியாமல் எப்படி திருமணம் நிச்சயம் பண்ணினார்கள் என பதிலளித்துள்ளார் ஹன்சிகா.