நலிந்த கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு
ADDED : 1090 days ago
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு சேலை, வேட்டி மற்றும் இனிப்புகள் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டது. இதற்காக நடிகர் சூர்யா 10 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். அதோடு நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், கோவை சரளா, ஸ்ரீமன், நாசர், லதா, விமல், கருணாஸ், மனோபாலா, தளபதி தினேஷ், விக்னேஷ், வாசு தேவன் ஆகியோர் இணைந்து 2 லட்சம் ரூபாய் வழங்கினர். இந்த தொகையை கொண்டு நலிந்த கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. சங்கத்தில் நடந்த விழாவில் கார்த்தி இந்த பரிசுகளை வழங்கினார். இதில் பூச்சி முருகன், மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெளியூரில் இருக்கும் கலைஞர்களுக்கு பரிசு பொருட்கள் அவர்களது வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.