ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் படத்தில் ரஜினிகாந்த்
தனுஷ் நடித்த ‛3', கவுதம் கார்த்திக் நடித்த ‛வை ராஜா வை' போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினி. அதோடு சில மியூசிக் ஆல்பங்களையும் இயக்கியுள்ளார். மேலும் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு ஹிந்தியில் ‛ஓ சாதி சால்' என்ற படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் பின்னர் அது குறித்த எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில் தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விரைவில் ஒரு படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்கப் போவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் பூஜை நவம்பர் மாதம் நடைபெற இருப்பதாகவும், அந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல் நவம்பர் மாதத்தில் நடக்கும் படத்தின் பூஜையின் போது வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.