உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே காயம்

படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே காயம்

தமிழில் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜாஹேக்டே தற்போது தெலுங்கு, ஹிந்தியில் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சல்மான்கான் உடன் இணைந்து நடிக்கும் ஒரு ஹிந்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட சிறிய விபத்தினால் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூஜா ஹெக்டேவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் ஓரிரு நாட்களிலேயே அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிவிட்டார். அடிப்பட்ட கால் உடன் அவர் படப்பிடிப்புக்காக மேக்கப் செய்து கொண்டு தயாராகும் போட்டோவையும் பதிவிட்டுள்ளார் பூஜா ஹெக்டே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !