உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் ஆண்டனியின் ‛தமிழரசன்' நவ.,18ல் வெளியீடு

விஜய் ஆண்டனியின் ‛தமிழரசன்' நவ.,18ல் வெளியீடு

விஜய் ஆண்டனியின் நடிப்பில் 'கோடியில் ஒருவன்', 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2' உள்ளிட்ட பல படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சில படங்களின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன. இதில் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள ‛தமிழரசன்' படத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், சோனு சூட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் நவம்பர் 18ம் தேதி தியேட்டரில் வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !