42வது படத்தில் ஐந்து வேடங்களில் நடிக்கும் சூர்யா!
ADDED : 1129 days ago
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தனது 42வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. மேலும், இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்தை 160 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சரித்திர கதையில் உருவாகி வரும் இந்த படம் 10 மொழிகளில் தயாராகிறது.
அதோடு இந்த படத்தில் சூர்யா, காட்டார், முக்காட்டார், அரத்தார், மாண்டாங்கர், பெருமனத்தார் என ஐந்து கேரக்டர்களில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதாணி நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.