சென்னை ஈ.சி.ஆரில் புதிய வீடு கட்டும் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா!
ADDED : 1093 days ago
சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் ரஜினியின் வீடு அமைந்துள்ளது. இதே பகுதியில் தற்போது தனுஷும் ஒரு வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் பணிகள் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் அந்த வீட்டில் குடியேறப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், தற்போது ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா மற்றும் விசாகன் ஆகியோர் தற்போது சென்னையில் உள்ள ஈசிஆர் சாலையில் ஒரு புதிய வீடு கட்டப் போகிறார்கள். இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. அந்த பூஜை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்தும் கலந்து கொண்டுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.