உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெளிநாடு தப்ப முயற்சி - நடிகை ஜாக்குலின் மீது அமலாக்கத்துறை புகார்!

வெளிநாடு தப்ப முயற்சி - நடிகை ஜாக்குலின் மீது அமலாக்கத்துறை புகார்!

பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தொழிலதிபர்களிடமிருந்து 200 கோடி ரூபாய் மோசடி செய்து, பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி ஆகியோருக்கு கார் மற்றும் விலை உயர்ந்த பரிசினை வழங்கியதாக விசாரணையில் கூறியிருந்தார். அதையடுத்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஜாக்குலின். அதையடுத்து இந்த மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில், நடிகை ஜாக்குலின் தனது மொபைலில் இருந்த சாட்சியங்களை அளித்ததோடு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதோடு அவர் வெளிநாடு செல்லவும் திட்டமிட்டார்.

ஆனால் அவரது பெயர் லுக் அவுட் நோட்டீஸில் இருந்ததால் அவரால் செல்ல முடியவில்லை என்று அவர் மீது அமலாக்கத்துறை டில்லி உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தது. இதையடுத்து ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நவம்பர் மாதம் 10ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து டெல்லி உயர்நீதின்றம் உத்தரவிட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !