யோகி பாபுவிற்கு பெண் குழந்தை பிறந்தது
ADDED : 1079 days ago
நடிகர் யோகிபாபுவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ரசிகர்கள் பலரும் தீபாவளி வாழ்த்துடன் குழந்தை பிறந்ததற்கு சேர்த்தும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். கடந்த 2020ல் இவருக்கு பார்கவி என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு விசாகன் என பெயரிட்டுள்ளார். இந்நிலையில் இந்த தம்பதிக்கு தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அதிகாலை 3:14 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தீபாவளி வாழ்த்துடன் பெண் குழந்தை பிறந்ததற்கும் சேர்த்து யோகிபாபுவிற்கு ரசிகர்கள் இரட்டை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.