உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆனந்தி கையிலும் ஆயுதத்த கொடுத்துட்டாங்கப்பு…

ஆனந்தி கையிலும் ஆயுதத்த கொடுத்துட்டாங்கப்பு…

பொறியாளன் படத்தின் மூலம் அறிமுகமானாலும் கயல் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஆனந்தி. கயல் ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார். த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, பண்டிகை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஆனந்தி தெலுங்கில் பஸ் ஸ்டாப், கிரீன் சிக்னல், சாம்பி ரெட்டி, ஸ்ரீதேவி சோடா சென்டர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் கடைசியாக கடந்த ஆண்டு வெளிவந்த கமலி பிரம் நடுக்காவேரி படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில் இட்லு மரேடும்மிலி ப்ரஜநீக்கம் படத்தில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக தமிழில் கயல் ஆனந்தி நடிக்கும் படம் ஒயிட் ரோஸ்.

அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில், உருவாகி வரும் இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஓய்வு பெற்ற தமிழக காவல்துறை அதிகாரியான ஜாங்கிட் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். .உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய ஜோஹன் சிவனேஷ் இசையமைக்கிறார்.

தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆனந்தி கையில் கோடாரியுடன் ஆக்ரோஷமாக நிற்கிறார். ஆனந்தி இதுவரை ரொம்ப சாதுவான கேரக்டர்களிலேயே நடித்திருக்கிறார். அதிர்ந்துகூட பேச மாட்டார். அப்படிப்பட்ட ஆனந்தி கையிலும் ஆயுதத்தை கொடுத்திட்டீங்களே... என்று நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !