மேலும் செய்திகள்
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
1072 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1072 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1072 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1072 days ago
கன்னடத்தில் சமீபத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேஜிஎப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பெல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள காந்தாரா திரைப்படத்தை எழுதி, இயக்கி நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. கர்நாடகாவில் நடைபெறும் கம்பாலா வீர விளையாட்டை மையப்படுத்தி காந்தாரா திரைப்படம் உருவாகியுள்ள இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
காந்தாரா திரைப்படத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர்கள் தனுஷ், சிம்பு, கார்த்தி, பிரித்விராஜ் உள்ளிட்ட பல திரையுலக நடிகர்கள் இப்படத்தை பார்த்து பாராட்டினார் . இந்த வரிசையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தும் பாராட்டி உள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், “தெரிந்ததை விட தெரியாதது அதிகம். சினிமாவில் இதை விட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது என்று தயாரிப்பு நிறுவனம் ஹோம்பலே நிறுவனத்தை பாராட்டி இருக்கும் ரஜினிகாந்த், காந்தாரா திரைப்படம் என்னை உற்சாகத்தின் உச்சத்தில் நிற்க வைத்திருக்கிறது. படத்தை எழுதி இயக்கி, நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டிக்கு ஹாட்ஸ் ஆப். இந்திய சினிமாவின் இந்த தலைசிறந்த படத்தை கொடுத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.
ரிஷப் ஷெட்டி நன்றி
இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் ரிஷப் ஷெட்டி, ''நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். சிறுவயது முதலே உங்களின் ரசிகன் நான். உங்கள் பாராட்டு மூலம் என் கனவு நனவாகி உள்ளத. உள்ளூர் கதைகளை படமாக்க இந்த வாழ்த்து என்னை மேலும் தூண்டியிருக்கிறது'' என்றார்.
1072 days ago
1072 days ago
1072 days ago
1072 days ago