மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
1047 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
1047 days ago
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம்
1047 days ago
நடிகர் ரஜினிகாந்த், லைகா நிறுவனத்திற்கு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நெல்சன் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ரஜினியின் 169வதுபடமாக உருவாகும் இதில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படம் முடிந்த பின் பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ரஜினி. இதுதொடர்பாக லைகாவின் சுபாஷ்கரன், தமிழ்குமரன் ஆகியோர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து ரஜினிக்கு மொத்தமாக ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தை டான் புகழ் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாகவும், மற்றொரு படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் புகழ் தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை நவ., 5ல் பிரமாண்டமாய் நடைபெற உள்ளது.
1047 days ago
1047 days ago
1047 days ago