உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கன்னட ரீமேக்கில் வரலட்சுமி

கன்னட ரீமேக்கில் வரலட்சுமி

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் புதிய படம் 'கொன்றால் பாவம்'. அவருடன் சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோரும் நடிக்க உள்ளனர். தயாள் பத்மநாபன் இயக்குகிறார்.

1981-களில் நடக்கும் கிளாஸிக் கிரைம் த்ரில்லர் கதையான இந்த படம் கன்னடத்தில் வெளிவந்த 'கரால ராத்திரி' என்ற படத்தின் ரீமேக். இந்த படம் கன்னடத்தில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த துணை நடிகைக்கான கர்நாடக மாநில விருதுகளை பெற்றது. இந்த படத்தை இயக்கிய தயாள் பத்மநாபனே இப்போது தமிழிலும் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் வருகிற 1ம் தேதி ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்க இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !