யார் அந்த மாப்பிள்ளை - வர்ஷா கேள்வி
ADDED : 1074 days ago
96, பிகில், செல்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வர்ஷா பொல்லம்மா. தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து இவர் வருகிறார். இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் மகனை காதலிப்பதாகவும், திருமணம் செய்யபோவதாகவும் தகவல் பரவியது.
இதை மறுத்துள்ள வர்ஷா, ‛‛எனது திருமணம் பற்றி வெளியான செய்தி உண்மையில்லை. அந்த மாப்பிள்ளை யார் என்று சொல்லுங்கள், அப்போது தான் அவரை பற்றி எனது வீட்டில் பேச முடியும். எனது திருமணம் பற்றி வெளியான செய்தி உண்மையில்லை. இப்போதைக்கு திருமணம் செய்யும் ஆசையில்லை. முழுகவனமும் சினிமாவில் மட்டுமே உள்ளது'' என்கிறார்.