மாடர்ன் தேவதை அக்ஷிதா போபைய்யாவின் க்ளிக்ஸ்
ADDED : 1071 days ago
தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயமானவர் நடிகை அக்ஷிதா போபைய்யா. தற்போது 'கண்ணான கண்ணே' தொடரில் கதாநாயகிக்கு தங்கையாக முக்கிய ரோலில் நடித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த அக்ஷிதா ஒரு புரொபஷனல் மாடல் ஆவார். எனவே, அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மாடர்ன் உடையில் வேற லெவலில் இருக்கும். அதற்காகவே அக்ஷிதாவுக்கு அதிக பாலோயர்ஸ் உள்ளனர். இந்நிலையில், மாடர்ன் உடையில் மட்டுமே இதுவரை புகைப்படங்கள் வெளியிட்டு வந்த அக்ஷிதா, முதன்முறையாக தமிழ்நாட்டு பெண் போல பாவாடை தாவணியில் செமையாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். பார்ப்பவர்கள் மனதை கொள்ளைக் கொள்ளளும் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.