உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியன் 2வில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் தந்தை

இந்தியன் 2வில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் தந்தை

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி வரும் படம் ‛இந்தியன் 2'. இரண்டு ஆண்டுகளாய் நின்று போன படம் மீண்டும் முழுவீச்சில் நடந்து வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. இதில் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் நடிக்கிறார். இந்தியன் 2 படத்திற்காக மேக்கப் போட்டு தான் தயாராகும் போட்டோவை பகிர்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ளார் யோக்ராஜ்.

யோக்ராஜ் சிங் ஏற்கனவே பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்துள்ளார். அதேப்போன்று பஞ்சாப் மொழியிலும் நடித்துள்ளார். தமிழில் ரஜினியின் தர்பார் படத்தில் நடித்தார். ரஜினியை தொடர்ந்து இப்போது கமல் உடனும் இணைந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !