விஷ்ணு விஷாலை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினி !
ADDED : 1113 days ago
நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களுடைய இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பட வேலைகளில் பிசியாக இருந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் . இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார் . லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை நாளை லைக்கா நிறுவனம் வெளியிட இருக்கிறார்கள் .