உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இன்று தான் எனக்கு தீபாவளி : உற்சாகத்தில் தமன்

இன்று தான் எனக்கு தீபாவளி : உற்சாகத்தில் தமன்

விஜய் ரசிகர்கள் வழக்கத்தை விட அதிகமாக எதிர்பார்க்கும் படமாக உருவாகி வருகிறது வாரிசு திரைப்படம். காரணம் விஜய் முதன்முறையாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடித்துள்ளார் என்பதுதான். வரும் பொங்கல் வெளியீடாக ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் போஸ்டர்கள் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டு வந்தன.

இந்த நிலையில் முதன்முதலாக இன்று இந்த படத்தில் ரஞ்சிதமே என்கிற முதல் பாடல் மாலை ஐந்தரை மணிக்கு வெளியாக உள்ளது. இந்தப்பாடலை நடிகர் விஜய்யே பாடியுள்ளார். இந்த படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் முதன்முறையாக விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் தமன்.

தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்து வரும் தமன், இந்த படத்தில் நிச்சயம் விஜய் ரசிகர்களை திருப்திப் படுத்தும் விதமாக பாடல்களை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவரது இசையமைப்பில் உருவாகியுள்ள ரஞ்சிதமே பாடல் வெளியாகும், “இன்று தான் எனக்கு தீபாவளி.. பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ள இசையமைப்பாளர் தமன், விஜய்யுடன் தான் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !