வடிவேலு எடுக்கும் புதிய அவதாரம்
ADDED : 1068 days ago
தமிழ் சினிமாவில் காமெடியன், ஹீரோ மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் வடிவேலு. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ரீ என்ட்ரி கொடுத்திருப்பவர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாகவும், மாமன்னன் படத்தில் குணச்சித்திர வேடத்திலும், சந்திரமுகி- 2 படத்தில் மீண்டும் காமெடியனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் முதன்முறையாக ஒரு படத்தில் வடிவேலு நெகட்டிவ் வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு என்ற படத்தை இயக்கிய ராம் பாலா அடுத்தபடியாக ஜிவி.பிரகாஷை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்குகிறார். அந்த படத்தில் தான் வடிவேலு நெகட்டிவ் வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படத்திற்காக தனது பாடிய லாங்குவேஜ் பக்காவாக மாற்றி முரட்டுத்தனமாக முகபாவணையுடன் நடிப்பதற்கும் திட்டமிட்டுள்ளாராம் வடிவேலு.