உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல்வர் வேடத்தில் பிரியாமணி

முதல்வர் வேடத்தில் பிரியாமணி

திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் பிரியாமணி. குறிப்பாக ஹிந்தியில் ஷாருக்கானின் ஜவான், அஜய் தேவ்கான் நடிக்கும் மைதான் போன்ற படங்கள் நடிக்கும் பிரியாமணி, நாகசைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் அவரது 22வது படத்தில் ஒரு அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு கட்டத்தில் அரசியல் கட்சி தலைவராகும் பிரியாமணி முதல்வர் ஆவது போன்றும், அதன்பின் அவர் என்னென்ன மாற்றங்கள் செய்கிறார் என்பது போன்றும் அவரது கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு பிறகு பிரியாமணி நடித்த வேடங்கள் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகாத நிலையில், தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இந்த படத்தில் பிரியாமணியின் கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களை கவரக்கூடிய வேடமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சரத்குமார், அரவிந்தசாமி, கிஷோர், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !