தயாராகிறது இன்னொரு ஐய்யப்பன் படம்
ADDED : 1065 days ago
தமிழில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ சபரி அய்யப்பன் என்கிற படம் தயாராகிறது. இதேப்போல ஸ்ரீ ராஜமணிகண்டன் என்ற பெயரில் இன்னொரு படம் தயாராகிறது. இதனை ஸ்ரீ சாய் ஹரிஷ் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதில் லொள்ளுசபா மனோகர், தர்மராஜ், எம்.கே.ரித்திகா செல்வராஜ், கொக்கி குமார், சாவித்ரி, முரளி சங்கர், மீனா, உள்பட பலர் நடிக்கிறார்கள். குட்லக் ரவிகுமார் இசை அமைக்கிறார், சஞ்சய் மணிகண்டன் இயக்கி உள்ளார். படத்தின் பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயராகி உள்ளது. வருகிற 25ம் தேதி படம் வெளிவருகிறது. இது ஐயப்பனின் மகிமையை கூறும் படமாக தயாராகி உள்ளது.