உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மத கலவரத்தை தூண்டும் தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய கோரிக்கை

மத கலவரத்தை தூண்டும் தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய கோரிக்கை

பாலிவுட் இயக்குனர் சுதிப்போ சென் இயக்கி இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தின் கதை கேரளாவில் வாழும் இந்து பெண்ணை முஸ்லிமாக மாற்றி அவரை தீவிரவாதியாக உருவாக்கி, அவள் தற்போது ஆப்கானிஸ்தான் சிறையில் இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் முஸ்லிம் உடை அணிந்த ஒரு பெண் பேசுகிறார். என் பெயர் ஷாலினி உன்னி கிருஷ்ணன். நான் பிறப்பால் இந்து. நான் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டேன். தற்போது ஆப்கானிஸ்தான் சிறையில் வாடுகிறேன். இங்கு நான் மட்டும் தனியாக இல்லை. 32 ஆயிரம் பெண்கள் சிறையில் இருக்கிறார்கள். எங்களை யாராவது காப்பாற்றுவார்களா? என்று கேட்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்த படம் கேரள மக்களை அவதூறு செய்வதாகவும், பொய்யான தகவல்களை கொண்டிருப்பதாகவும், மத கலவரத்தை தூண்டும் விதத்தில் இருப்பதாகவும் அதனால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தணிக்கைக் குழுவில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், ஒரு பிரிவினரின் மத உணர்வுகளை புண்படுத்துவது மற்றும் கலவரத்திற்கு அழைப்பு விடுப்பது போன்ற கருப்பொருள் படத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கேரளா டிஜிபி அனில்காந்த் திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனருக்கு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த படத்தில் முஸ்லிம் பெண்ணாக நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை அடா சர்மா. இவர் தமிழில் சார்லி சாப்ளின் 2, மற்றும் இது நம்ம ஆளு படத்திலும் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !