மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
1027 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
1027 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
1027 days ago
தென்னிந்திய சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த நடிகையாகிவிட்டார் சமந்தா. இந்நிலையில் ஹரி - ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள யசோதா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று 5 மொழிகளில் நேற்று முன்தினம் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் வரலட்சுமி, உன்னி முகுந்தன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் திரையிட்ட முதல் நாளில் இருந்தே மிகப் பெரிய அளவில் வசூலித்து இதற்கு முன்பு கதையின் நாயகியாக நடித்த நடிகைகளின் படங்களை விட கூடுதலாக வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்குத்தான் அவர்களின் ரசிகர்கள் பிரமாண்டமான கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்துள்ள நிலையில், தற்போது சமந்தாவின் பிரம்மாண்டமான கட்அவுட்டிற்கு ஆந்திராவில் உள்ள அவரது ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்துள்ளார்கள். இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதை சமந்தா பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
1027 days ago
1027 days ago
1027 days ago