நவ.,14ல் வெளியாகும் கார்த்தியின் ஜப்பான் பர்ஸ்ட் லுக்
ADDED : 1098 days ago
பொன்னியின் செல்வன், சர்தார் படங்களை அடுத்து கார்த்தி நடிக்கும் படம் ஜப்பான். ராஜூ முருகன் இயக்குகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜை உடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தற்போது ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், ஜப்பான் படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 14ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அன்பறிவ் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார்.