ஐதராபாத்தில் கொன்றால் பாவம் படப்பிடிப்பு
ADDED : 1148 days ago
ஸ்ரீ மோகன் ஹபுவின் கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ‛கொன்றால் பாவம்'. கன்னடம் தான் இதன் மூலக் கதை என்றாலும் தெலுங்கு மற்றும் தமிழிலும் தயாள் பத்மநாபன் இயக்குகிறார். வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் ப்ரதாப் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயகுமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், டி.எஸ்.ஆர். ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி மற்றும் பலர் நடிக்கின்றனர். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு நடந்து வந்த முதல் கட்ட படிப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.