கமல் - விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைகிறது
ADDED : 1055 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் அவருடன் இணைந்து விஜய் சேதுபதி, பஹத் பாசில் போன்றவர்களும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கும் கமல், எச்.வினோத் இயக்கும் இன்னொரு படத்திலும் நடிக்கப் போகிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. மேலும் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி மீண்டும் இந்த படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடிக்கப்போகிறார். கமலின் 233வது படமான இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.