மாரி செல்வராஜின் அடுத்த படம்
ADDED : 1055 days ago
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' திரைபடங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதியை வைத்து 'மாமன்னன்' என்னும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.
துருவ் விக்ரமை வைத்து அடுத்த படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில் மாரி செல்வராஜின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட போஸ்டரில் இலையின் நடுவில் 4 சிறுவர்கள் ஓடும் காட்சி இடம் பெற்றுள்ளது. நாளை (நவ.,21) காலை மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.