அந்தகன் படப்பிடிப்பு நிறைவு : சிம்ரன் வெளியிட்ட தகவல்
ADDED : 1151 days ago
ஹிந்தியில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் அந்தாதூண். இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். மூன்று தேசிய விருதுகளை பெற்ற இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் பெற்று இருந்தார். இந்த படத்தை மோகன் ராஜா இயக்குவதாக இருந்த நிலையில் தற்போது தியாகராஜனே தனது மகன் பிரசாந்தை வைத்து இருக்கி உள்ளார்.
இப்படத்தில் பிரசாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், இப்படத்தை திரையில் காண தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். அதோடு இப்படத்தின் இரண்டு போஸ்டர்களையும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.