சிம்புவின் பத்து தல படத்தின் ரிலீஸ் தள்ளி போனது
ADDED : 1093 days ago
மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‛பத்து தல'. இப்படத்தில் அவருடன் பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்து வெளியான மப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த படம். நிழல் உலக தாதாவை தேடிப் போகும் ஒரு ரகசிய போலீசை பற்றிய கதையில் இப்படம் உருவாகிறது. மேலும் இந்த பத்து தல படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடிவடையாததால் இப்படத்தின் ரிலீஸை டிசம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார்கள். இப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.