மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1016 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1016 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடுவாலா மீது புகார் கொடுத்தார் சூரி. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் நான்காவது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார் சூரி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூரி, ‛‛பலமுறை விசாரணைக்கு வந்துள்ளேன், திருப்பி திருப்பி விசாரிக்கிறார்கள். போலீஸ், நீதி துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் எங்கப்பா சூட்டிங் என எனது பிள்ளைகள் கேட்பார்கள். இப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு போறீங்களானு கேக்குறாங்க. கனவில் கூட போலீஸ் ஸ்டேஷன் தான் வருகிறது'' என்றார்.
1016 days ago
1016 days ago