லால் சலாம் படத்திற்காக மெட்டு போடும் ரஹ்மான்
ADDED : 1090 days ago
நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கணவர் தனுஷூடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். தற்போது திரைப்படங்களை இயக்குவதில் தனது கவனம் செலுத்தி வரும் அவர் ‛லால் சலாம்' என்ற படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, சிறப்பு வேடத்தில் ரஜினிகாந்த் முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு இசை பணிகள் துவங்கி உள்ளன. தற்போது மும்பையில் உள்ள ரஹ்மானை சந்தித்த ஐஸ்வர்யா புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் லால் சலாம் படத்திற்காக ரஹ்மான் மெட்டு போடும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலானது .