‛விக்ரம்' பாணியில் விஜய் 67 பட அறிவிப்பு டீசர்
ADDED : 1084 days ago
கமல் நடித்த விக்ரம் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 67 வது படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். மேலும் தான் புதிதாக இயக்கும் படங்களில் முந்தைய படங்களின் கதாபாத்திரங்களை இணைத்து தனது மாறுபட்ட படைப்பாற்றலை வெளிப்படுத்தி வரும் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் 67வது படத்தின் அறிவிப்பினை கமலின் விக்ரம் படத்தை போலவே ஒரு டீசர் மூலம் அறிவிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். விக்ரம் படம் தொடங்குவதற்கு முன்பு, ஆரம்பிக்கலாங்களா... என்ற வார்த்தை இடம்பெற்ற ஒரு டீசர் வெளியானது. அதேபாணியில் விஜய் 67 பட டீசரும் வெளியாக உள்ளது. அதன் காரணமாக வருகிற திங்கள்கிழமை முதல் விஜய் 67வது படத்தின் அறிவிப்பு டீசருக்கான படப்பிடிப்பை நடத்துகிறார் லோகேஷ். இந்த படப்பிடிப்பில் விஜய்யும் கலந்து கொள்கிறார்.