வெப் தொடருக்காக பணியாற்றிய 100 இசை கலைஞர்கள்
ADDED : 1044 days ago
தமிழில் திரைப்படங்களுக்கு நிகராக வெப் தொடர்களும் தயாராக தொடங்கி விட்டது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது வதந்தி. புஷ்கர், காயத்ரி தயாரித்துள்ள இந்த தொடரை கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். எஸ்.ஜே.சூர்யா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். லைலா, நாசர், சஞ்சனா, விவேக் பிரசன்னா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த தொடருக்கு சைமன் கே.கிங் இசை அமைத்துளளார். இந்த தொடருக்கு பின்னணி இசை மிகவும் முக்கிமாயனது என்பதால் உலகமெங்குமுள்ள 100 இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து வதந்தி வலைத்தொடருக்கு பின்னணி இசை அமைத்துள்ளார் சைமன். இதில் 40 பேர் இந்தியர்கள். ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் இந்த பணி நடந்துள்ளது. பின்னணி இசையோடு டைட்டில் டிராக்கும் உருவாக்கப்பட்டுள்ளது.