உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் முதல் வாரத்தில் 10 கோடி வசூலித்த 'லவ் டுடே'

தெலுங்கில் முதல் வாரத்தில் 10 கோடி வசூலித்த 'லவ் டுடே'

பிரதீப் ரங்கநாதன் இயக்கம், நடிப்பில் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'லவ் டுடே'. இப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு நவம்பர் 25ம் தேதி வெளியானது. படத்திற்கு முதல் நாளிலிருந்தே இளம் ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது. தமிழைப் போலவே தெலுங்கிலும் இளம் ரசிகர்கள் இப்படத்தை விரும்பிப் பார்த்துள்ளார்கள்.

முதல் வாரத்தில் மட்டும் இப்படம் சுமார் 10 கோடி வரை வசூலித்துள்ளது. அதில் பங்குத் தொகையாக மட்டும் 5 கோடி கிடைத்துள்ளது. இப்படம் அங்கு வெளியான போது வெளியான மற்ற நேரடி தெலுங்குப் படங்களைக் காட்டிலும் நல்ல வசூலைக் குவித்து லாபத்தையும் கொடுத்துள்ளது. ஒரு அறிமுக நடிகர் நடித்த, ஒரு டப்பிங் படத்திற்கு முதல் வார வசூலில் இது மிகப் பெரிய வெற்றி என்று சொல்கிறார்கள்.

தமிழில் இப்படத்தின் வசூல் 75 கோடியைத் தாண்டிவிட்டதாக ஒரு தகவல். தெலுங்கு வசூல், மற்ற மொழி உரிமை வசூல், சாட்டிலைட், ஓடிடி உரிமை என இப்படம் மொத்தமாக 100 கோடி வரை லாபத்தைக் கொடுத்தாலும் ஆச்சரியமில்லையாம். இதனால் பிரதீப்பின் அடுத்த படத்திற்கு இப்போதே அதிக 'டிமான்ட்' என்பது தகவல். அவர் இயக்கி, நடிக்க உள்ள அடுத்த படத்தைப் பெற பல தயாரிப்பாளர்கள் போட்டியில் இருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !