ரிஸ்க்கான சண்டைகாட்சியில் டூப் இல்லாமல் நடித்த சாக்ஷி
ADDED : 1044 days ago
பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் தற்போது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் 'நான் கடவுள் இல்லை' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படத்தில் எந்தவித டூப்பும் இல்லாமல் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். ஏற்கனவே பிட்டான உடம்பிற்கும் கவர்ச்சிக்கும் பெயர்போன சாக்ஷி அகர்வால் தற்போது ஆக்ஷன் குயினாகவும் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும், இது தொடர்பில் அவர் அளித்துள்ள பேட்டியில் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடிப்பேன் என்றும், அடுத்த விஜயசாந்தியாக தன்னை எதிர்ப்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். சாக்ஷி அகர்வால் தற்போது பஹீரா, கெஸ்ட் சாப்டர்2 மற்றும் கந்தர்வக்கோட்டை இயக்குநர் சக்தியின் புதிய படமொன்றிலும் நடித்து முடித்துள்ளார்.