ஓடிடி-யில் வெளியானது 'லவ் டுடே'
ADDED : 1044 days ago
'கோமாளி' படத்தின் மூலம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு 'லவ் டுடே' படத்தை இயக்கியுள்ளார். அதோடு இந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 2 கே கிட்ஸ்களின் சமகால வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. கடந்த 4-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெறும் ஐந்தாறு கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் தற்போது 70 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் அங்கும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
தற்போது பல தியேட்டர்களில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்க, ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது.